யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மீசாலை பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கிய முதியவர்கள் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மீசாலை, ஐயா கடை சந்தி பகுதியில் இந்த விபத்து, இன்று காலை 5 மணியளவில் நடந்தது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கிளினிக்கிற்கு சென்ற மூதாட்டியும், கூலி வேலைக்கு சென்ற மற்றொரு முதியவரும் வீதியோரமாக பயணித்துக் கொண்டிருந்த போது, கார் ஒன்று அவர்களை மோதித்தள்ளி, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பொலன்னறுவையை சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த காரே விபத்துக்குள்ளானது.
தமது மகளை யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அழைத்து வந்த போது, இந்த விபத்தில் சிக்கினர். கார் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணமென அறிய வருகிறது.