மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் நகரில் உள்ள ஒரு கோவிலில் கற்களையும் செங்கற்களையும் வீ சியதாக 28 வயது இளைஞரான விக்கி மால் எனும் இளைஞர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவிலின் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சிவபெருமானின் சிலைகள் இன்று காலை உ டை ந்திருப்பதை வைஷ்ணோ மாதா மந்திரின் அர்ச்சகர் ரஞ்சீத் பதக் கண்டறிந்தார் மேலும் கோவில் வளாகத்திற்குள் கற்கள் மற்றும் செங்கல் துண்டுகள் கிடந்ததை அடுத்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்
விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது, குப்பை பொறுக்கும் நபராக பணியாற்றிய விக்கி மால் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதைக் கண்டறிந்தனர்
கொரோனா வைரஸால் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் தனது தந்தையுடன் பணிபுரிந்தார் பின்னர் அவரது தந்தை மீண்டும் பீகாரில் உள்ள மோதிஹாரிக்குச் சென்றார்
விக்கி மால் இங்கேயே தங்கி பணிபுரிந்த நிலையில், ஒரு மோசமான வாழ்க்கையைக் கொடுத்ததற்காக கடவுளுக்கு எதிராக வெறுப்படையத் தொடங்கினார் என ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்
இதையடுத்து கோவிலில் உள்ள சாமி சிலை மீது கற்களையும் செங்கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார் இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது