உருமாறிய இந்திய கொரோனா வைரசின் வீரியத்தை தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் எதிர்கொள்ளுமா என உலக ஆய்வுநிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், வியட்னாமில் அடையாளங்காணப்பட்டுள்ள உருமாறிய புதிய கொரோனா வைரஸ், புதியதொரு தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.
உருமாறிய பிரித்தானிய வைரஸ், இந்திய வைரஸ்களின் கலவையாக இது காணப்படுவதாக ஆரம்பகட்ட சோதனைகளின் இனங்காணப்பட்டுள்ளதோடு, காற்றின் ஊடாக வேகமாக பரவக்கூடிய வீச்சினைக் கொண்டதாக இது காணப்படுகின்றது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வியட்னாமின் பெரும்பகுதி கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், இப்புதிய வைரஸ் வியட்னாமுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.