நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim)முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்தார்.
அதேவேளை கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்தடைந்த எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) நேற்று ( 11) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
மகிந்த ராஜபக்க்ஷ நாட்டின் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராக எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) செயற்பட்டிருந்தவர் ஆவார்.
அதேவேளை மஹிந்தவுடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சுரேன் ராகவனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.