ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சுகளின் செய லாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விருந்து வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விருந்து நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற் றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருந்தில் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அவர்களின் மனைவி அல்லது கணவன்மார் அழைக்கப் பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் இரவு இலங்கையின் முன்னணி வர்த்தகர்களான சுமார் 50 பேருக்கு ஜனாதிபதி விருந்தை வழங்கியதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

