இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் இன்று (12) திருமணம் நடைபெறவுள்ளது.
அவர்கள் 2023 ஜனவரியில் மும்பையில் உள்ள அண்டல்யா இல்லத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் இன்று12ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரம்மாண்ட வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது.