தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமாகிய மாவீரர்களை நினைவு கூரும் வாரம் ஆரம்பமாகவுள்ளது.
இந் நிலையில் கிளிநொச்சியில் மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி இன்று கிளிநொச்சி திருநகர் பகுதியிலும் அதை அண்டிய பகுதியிலும் இரானுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இராணுவத்தினரின் நடவடிக்கையால் தாம் அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.