யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆறு பேர் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம. சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்கள் எவரும் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
கடந்த 11ஆம் திகதி சங்குவேலியில் வைத்து மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் 12ஆம் திகதி தொடக்கம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கோரோனா உள்ளமை உறுதிப்படுத்ததை அடுத்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பி சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்ட சந்தேக நபருடன் தொடர்புடைய 4 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் சந்தேக நபரை கடந்த 11ஆம் கைது செய்த மற்றும் மல்லாகம் நீதிமன்றுக்கு அழைத்து சென்றவர்கள் என மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் மற்றும் 4 பொலிஸ் கொஸ்தாபல்கள் என 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் கைது செய்வதற்கு முன் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பில் கண்டறிவதில் சுகாதாரத் துறையினர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.