மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து பயணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை என கொவிட் தடுப்பு தெரிவித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரமும் போக்குவரத்து நடவடிக்கை மாகாணங்களுக்குள் மாத்திரமே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.