இன்றைய தினம் (8) உலகெங்கும் வாழும் இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் அனுஸ்டிகப்பட்டுள்ளது.
சிவனுக்குரிய மிகப்வும் முக்கியமான விரதங்களுள் மஹா சிவராத்திரி தினமும் ஒன்றாகும். அந்தவகையில் இலங்கையிலுள்ள ஆலயங்களில் மஹா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாட்டப்படவுள்ளது.
இந்நிலையில் மஹா சிவராத்திரி தினத்தை தென்னிந்திய இசைக்கலைஞர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். அந்தவகையில் இந்த வருடம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (8) மஹா சிவராத்திரி தினம் கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று இடம்பெற இருக்கும் மஹா சிவராத்திரி பக்தி இசை நிகழ்விற்கு தென்னிந்திய இசைக்கலைஞர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.