நாட்டில் 1,320 புதிய மருத்துவர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நியமனம் வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி அன்றைய தினம் முதல் நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு புதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களை மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இந்நாட்டில் உள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 19 ஆயிரமாகவும், புதிய மருத்துவர்களை நியமிக்கும் போது 20 ஆயிரத்தைத் தாண்டும் எனவும் சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 800 வரை உள்ளதால், அதை 5 ஆயிரமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.