இந்தியாவின் ஊனமான பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்காக இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பபிதா தேவி. இவர் கணவர் பவன்குமார். தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறக்கும் போதே ஊனமாக பிறந்ததால் அதை பார்த்து பவன்குமார் கோபமடைந்தார்.இதை தொடர்ந்து மனைவியையும், குழந்தையையும் அடித்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து கணவர் வீட்டுக்கு பபிதா தனது குடும்பத்துடன் வந்தார். ஆனால் கோபம் குறையாத பவன்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் அவர்களை இரக்கமின்றி அடித்து உதைத்தனர்.இதனால் காயமடைந்த பபிதா மற்றும் அவர் குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.