மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் கூட்டுப் பணிப்பாளர் அஜான் ஹர்திய புஞ்சிஹேவா ஆகியோரை நீதிமன்ற உத்தரவுக்கமைய நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோது சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேரா அதற்கான சட்ட நடவடிக்கை தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமைய செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள 2015 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதிவாதிகள் பத்து பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி வழக்கு எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று அதனை தெரிவித்துள்ளது.