மத்திய மாகாண ஆளுநரால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்து குண்டசாலை பிரதேசசபையின் பெண் உறுப்பினர்கள் இருவர் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆளுநரைச் சந்திப்பதற்காக நேற்று (4) மாலை 2 மணியளவில் அலுவலகத்துக்கு சென்ற போது, ஆளுநர் தம்மை திட்டியதாகவும் இதனால் தாம் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.
குண்டசாலை பிரதேசசபை
குண்டசாலை பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான தீபிகா குமாரஹாமி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான பொடி மெனிகே அபேசிங்க ஆகியோரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் குற்றஞ்சுமத்தும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் பெண் உறுப்பினர்கள் இருவரும் தன் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகே தெரிவித்துள்ளார்