இன்றைய காலக்கட்டத்தில் வீடுகளில் வாஸ்து படி வித்தியாசமான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
அந்த வரிசையில் துளசி, மணி பிளாண்ட், கற்றாழை ஆகிய தாவரங்கள் உள்ளடங்குகின்றன.
இவற்றை வாஸ்து படி வீடுகளில் வைக்கும் பொழுது எதிர்மறையான சக்திகள் வீட்டினுள் வராது என மக்கள் நம்புகிறார்கள்.
ஆனால் அழகிற்காக வீடுகளில் வளர்க்கப்படும் சில தாவரங்கள் வீட்டில் பிரச்சினையை உண்டு பண்ணும்.
இவற்றை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
இதன்படி, வீடுகளில் வளர்க்க கூடாத தாவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. முற்களால் ஆன தண்டை கொண்ட கள்ளி செடியை வீட்டில் வைக்கக் கூடாது. இதனை வீட்டினுள் அழகிற்காக சிலர் வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்து படி வீட்டில் வைக்கக் கூடாது.
2. பொன்சாய் தாவரம் நமது வாழ்க்கையிலும் வளர்ச்சி ஏற்படுவதை குறைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தாவரம் வீட்டிற்கு வெளியில் வைக்கலாம்.
வீட்டு வாசலுக்கு நேராகவோ அல்லது படுக்கையறை மற்றும் சமையலைறையைப் பார்த்த படி மேற்குறிப்பிட்ட தாவரங்களை வைக்கக் கூடாது. ஏனெனின் இது தீய சக்திகளை கொண்டு வரும்.
3. மூங்கில் செடிகளை வீட்டில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது வாழ்க்கையின் ஆரம்பத்தை இல்லாமலாக்கும்.
4. பெரும்பாலான வீடுகளில் பொட்பேரி தாவரம் அழகிற்காக வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த தாவரம் நம்மை வளர விடாமல் தடுக்கும் என கூறப்படுகின்றது.
5. அரச மரம் மற்றும் அதன் வேர்கள் அதிகப்படியான நீரை உறிஞ்சக்கூடியவை. இதனால் இவற்றை நம் வீடுகளில் நடும் போது அவை சுவர்களில் விரிசல்களை ஏற்படுத்துவதோடு அடித்தளத்தை வலுவிழக்கச் செய்யும்.

