பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஹெலிகாப்டர் மூலம் பண மழைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மண்டி பகுவாஹ்டின் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பணமழை பொழிந்தது விருந்தினர்களையும், பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சியின்போது ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா மலர் இதழ்களும், பணமும் மழை போல தரையில் தூவப்பட்டன. பஞ்சாபில் திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர்கள் மீது ரோஜா இதழ்களை தூவுவது வழக்கம்தான்.
ஆனால், ரோஜா இதழ்களுடன் பணத்தை சேர்த்து தூவலாம் என மணமகனின் சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அதில் ரோஜா இதழ்களையும், பணத்தையும் ஏற்றியுள்ளனர். ஹராயா கிராமத்தில் இருந்து திருமண மண்டபத்துக்கு மணமகன் வந்தபோது அவர் மீது பணமழை பொழிந்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளத்தில் பல்வேறு விமர்சணங்களை பெற்றுள்ளது.