நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான், புலிபாஞ்சகல், வடமுனை போன்ற கிராமத்தில் வாழும் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு 35000,00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிய டென்மார்க்கில் வசிக்கும் திரு திருமதி கதிர்காமு மார்க்கண்டு அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் இணைந்து உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக வழங்கியுள்ளார்கள். அவர்களின் நிதியில் இருந்து முதற் கட்டமாக இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நலமோடு வாழ இறைவனைப் பிராத்திப்பதுடன் இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கியவர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.