மக்களுக்குச் சார்பான கொள்கை ரீதியான தீர்மானங் களைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினை களை மறைக்கத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இழுபறியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திட்டங்களைச் செயல்படுத்துவதில் வன விலங்கு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வீதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களின் பொறுப்பான அதிகாரிகள் ஒரு கூட்டு முடிவுக்கு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன் காணிப் பயன்பாடு குறித்து முறையான திட்டமிடல் இல்லாதது மக்களின் தவறு அல்ல. காணிப் பிரச்சினைகள் உட்படப் பல கிராமப்புற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும்போது அதிகாரிகள் களத்திற்குச் சென்று உண்மையான நிலைமையைப் பார்த்து தீர் மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானது.
நேற்று முன்தினம் புத்தளம் மாவட்டத்தில் கருவலகஸ்வெவ பிரதேச செயலக பிரிவிலுள்ள பலீகம கிராம சேவகர் பிரிவிலுள்ள நெலும்வெவ சனசமூக நிலைய வளாகத்தில் இடம்பெற்ற 11 ஆவது ‘கிராமத்துடன் உரையாடல்’நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.