இந்தியாவில் சொந்த மகளிடம் தவறாக நடக்க முற்பட்ட கணவரை, வீட்டிலேயே கொலை செய்து எரித்த மனைவியை கைது செய்துள்ளனர்.ஹைதராபாத் நகரில் வனஸ்தாளிபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெறுள்ளது.
குறித்த சந்தேக நபருக்கு இரண்டு திருமணங்கள் இடம்பெற்றுள்ளது.அதில் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடித்ததில் குழந்தைகள் காணப்பட்டுள்ளனர்.ஓராண்டுக்கும் மேலாக இருவரும் இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை நடாத்திச் சென்றுள்ளனர்.
எனினும் சில நாட்களின் பின்பு, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கணவன் தினம் குடித்து விட்டு, மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்இதில் ஆத்திரமடைந்த மனைவி சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்துள்ளார்.
அதன்படி, பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு சென்ற கணவன், பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.அப்போது, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவனை கொலை செய்து, வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக உடலை வீட்டிலேயே எரித்துள்ளார்.
பின்னர், வீட்டின் முன்புறத்தில் ஆழமாக குழி தோண்டி புதைத்துள்ளார்.
நாளாக நாளாக கணவன் குறித்து அனைவரும் விசாரிக்க தொடங்கியதால், பதற்றமடைந்து காவல்நிலையத்தில் கணவரைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரிக்க தொடங்கிய காவல்துறையினர், முதல் மனைவி மற்றும் தம்பி ஆகியோரிடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, அவர்களுக்கு இடையே இருந்த சண்டைகளை விளக்கி கூறியுள்ளனர். இதனால், காவல்துறையினர் முதல் மனைவியின் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
அதன்பின், 2வது மனைவியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது, கணவன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்த மகள்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்துவிட்டதாகவும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
உடலை எரித்து வீட்டிலேயே புதைத்ததையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், எரிக்கப்பட்ட நிலையில் இருந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை செய்த குற்றத்துக்காக மனைவியை கைது செய்தனர்.