தமிழகத்தில் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் 38 வயதான தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ராணிப்பேட்டையின் கலவையை அடுத்த நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவரின் மனைவி பொற்கொடி (38).
இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகள் திருமணத்துக்கு எந்தவித பண ஏற்பாடும் ஆனந்தன் செய்யாமல் இருந்துள்ளார்.இதனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆனந்தன் வெளியில் சென்ற போது வீட்டில் இருந்த பொற்கொடி மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் மனமுடைந்த நிலையில் எலி மருந்தை சாப்பிட்டு விட்டு மயக்கமடைந்து கிடந்தார்.அவரின் நிலையை வந்து பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் பொற்கொடியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொற்கொடி உயிரிழந்தார்.இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.