சிறைச்சாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கைதிகளின் பெயர்களை பொது மன்னிப்பு வழங்கும் பட்டியலில் இணைத்துக் கொள்ளாதிருப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
சிறைகைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நடைமுறைகளின் போது, கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், சிறைச்சாலை சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பவர்களின் பெயர்களை உள்ளடக்காதிருக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றார்.