போதைப்பொருள் விநியோகம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார்.
போதைப்பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர். இன்று போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த செய்தியை கொடுக்கிறோம் எனவும் கூறினார்.