அரசியலமைப்புக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
நாட்டிற்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான நிலைப்பாடு தொடர்பாக செயலாற்றுவது அவசியமாவதுடன் நல்லிணக்கம் பற்றி மக்களுக்கு வழங்கியுள்ள இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதும் அரசாங்கத்தின் கடமை என்றும் வெளிநாட்டு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அரசின் மனித உரிமைகள் தொடர்பாக வழங்கப்பட்ட இணக்கம் தெரிவித்தல் தொடர்பாக முன்னோக்கிச் செல்வதாகவும், அதற்கிணங்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு, நீதியை நிலைநாட்டுதல், அரச பொறிமுறை தொடர்பாக அனைவரையும் பங்கேற்கச் செய்யும் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன முழு உலகமும் அதனை மிகவும் அவதானத்துடன் நோக்குகிறது.
அத்துடன் வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் அது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன ஜனநாயக அபிலாசைகளுக்கு ஏற்ப அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் வெளிநாட்டு அமைச்சர், பாராளுமன்றத்தில் நேற்று (19) சுட்டிக்காட்டினார்.
அதில் சிவில் சட்டம் மற்றும் வர்த்தக சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடிந்தது. எவ்வளவு தான் சிரமமாக இருந்தாலும் அனைத்துத் திட்டங்களையும் செயற்படுத்தி ஏதேனும் கட்டமைப்புக்கு ஊடாக நடை முறைப்படுத்துவதாக வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மையில் நிறைவடைந்த மனித உரிமைகள் பேரவை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவை இடம்பெற்ற காலப்பகுதியில், மனித உரிமைகள் தொடர்பாக தாம் பதில் ஆணையாளருடன் கலந்துரையாடியதாகவும் வெளிவாரியான சாட்சிகளை சேகரிக்கும் கட்டமைப்புத் தொடர்பாக அங்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இம்முறை மனித உரிமைகள் பேரவையில் ஏழு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் கடந்த முறை, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இம்முறை 20 நாடுகள் வாக்களிக்காது ஒதுங்கியிருந்தன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் 38 நாடுகள் நமது நாட்டிற்கு ஆதரவளித்துள்ளன. இலங்கையில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் நமது மக்களுக்கு உதவ வேண்டும் என பல நாடுகள் கருத்துத் தெரிவித்தன. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறேன் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
இலங்கை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணித்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து அனுபவங்கள் மற்றும் அவற்றை சாதகமாக முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆளுமை உள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறினார்.