உதவி வழங்கியவர்கள்:Lavida GmbH, Obendorf Germany.
உதவியின் நோக்கம்;உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 7 வது கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது
முள்ளி வாய்க்கால் முடிவுற்றதன் பின் எமது பிரதேசங்களில் போதைப்பொருட்களின் வருகையும் போதைவஸ்த்து பாவனையாளர்களின் அதிகரிப்பு எம்மை கவலைக்குள்ளாக்கியுள்ளது. எமது கல்வி கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை
திட்டமிட்டு அளிப்பதற்கு கங்கணம் கட்டி செயல் படுகின்றார்கள். போதைவஸ்த்தினை எமது மாணவச் செல்வங்களை குறிவைத்து மரணத்தின் பிடியில் சிக்க முயற்சிக்கின்றார்கள் நம் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எமது பிள்ளைகளை நல் வழிப்படுத்துவதற்காக நாம் சிறு முயற்சி எடுத்து வருகின்றோம். எமது பிள்ளைகளின் எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலை நேரக்கல்வி நிலையங்கள் மற்றும் அறநெறி வகுப்புக்களையும் ஆரம்பித்து வருகின்றோம். அந்த வகையில் இன்று 7 வது கல்வி நிலையமாக பொத்துவில் ஊறணி என்னும் கிராமத்தில் ஆரம்பித்து வைத்துள்ளோம்
பொத்துவில் ஊறணி என்னும் கிராமத்தில் மாலை நேரக் கல்வி நிலையம் Lavida GmbH,Obendorf Germany தளபாட நிறுவனத்தின் நிதியில் இருந்து 22.12.2022 இலவச மாலை நேரக்கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.அத்துடன் இந்த இடத்தினை தந்துதவியவர்களுக்கும்,சிரமதானப்பணிகள் செய்து உதவி வழங்கியவர்களுக்கும்,இந்த செயற்பாட்டினை செய்து தந்த எமது அம்பாறை செயற்பாட்டாளர் திரு .என்.கிருஷ்ணலதன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதுடன் இந்த நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த பொத்துவில் பிரதேச செயலாளர் திரு.இஸ்மாயில்,கிராம சேவகர் திரு இ.இராசேந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு பெ.ஜெனாத்,சமுத்தி உத்தியோகத்தர் திருமதி.சுலோஜினி பிரபாகரன்,அதிபர் ஊறணி சரஸ்வதி மகாவித்தியாலயம் திரு.க.கமல்ராஜன் அவர்களுக்கும் மேலும் இந்த நிதியினை பெற்றுத்தந்த திருமதி தணிகைநாதன் தணிகைச்செல்வி அவர்களுக்கும் இந்த நிதியினை வழங்கிய Lavida GmbH- Obendorf Germany நிறுவனத்துக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
பொத்துவில் ஊறணி என்னும் கிராமத்தில் மாலை நேரக் கல்வி நிலையம் Lavida GmbH,Obendorf Germany Helping Heart e.V
Previous Articleஇலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு-Karihaalan news
Next Article LPL இறுதிப் போட்டி ஆரம்பம்-Karihaalan news