தமிழகம் ராமநாதபுரம் அருகே உடல் நிலை சரியில்லாத மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் தாக்கியதில் கல்லூரி மாணவி பரிதாமாக உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது கோரவள்ளி கிராமம். இங்கு வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் வெளிநாடுகளில் கூலி வேலைசெய்து வருபவர்களாக உள்ளனர். சிலர், உள்ளூரிலேயே விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீர செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சொந்த கிராமத்திற்கு திரும்பி தற்போது விவசாயம் செய்து வருகிறார், இவருக்கு கோபிநாத் (20) என்ற மகனும், தாரணி (19) என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி கவிதா 9 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தாரணி கீழக்கரை தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதாக சொல்லப்படுகிறது.