பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை மானிய அடிப்படையில் வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் கூடிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மொத்தமுள்ள 115,867 தொழிலாளர்களுக்கு மாதாந்தம் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தபோதும் பின்னர் அது தாமதப்பட்டு வந்தது.
இதனையடுத்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வியை அடுத்தே அமைச்சரவை தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.