உடுகம – நாச்சியாகம பிரதேசத்தில் புல் வெட்டும் இயந்திரத்தில் கால் சிக்கியதில் அதிகளவில் இரத்தம் வெளியேறியதால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (03) பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
35 வயதான இப்பெண் உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.