காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனைய் பிரசவித்த பின்னர் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் திகதி புதைக்கப்பட்ட சிசுவின் சடலம், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று (8) மீட்கப்பட்டது.
குழந்தையை பிரசவித்த பின்னர் முறையற்ற நாட்டுபற சிகிச்சை பெற முயன்ற பெண், பின்னர் வயிற்றுவலியன கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் குழந்தை பிரசவித்திருக்கலாமென்ற சந்தேகத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினால், காத்தான்குடி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தை பிரசவித்த பின்னர் புதைகப்பட்ட தகவல் தெரிய வந்தது.
26 வயதான தாய் தனது வீட்டிலேயே சிசுவை பிரசவித்துள்ளார். சிசு மரணித்து பிறந்ததாக கூறி, பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக பள்ளிவாசல் மையவாடியில் 2ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டது.
அந்த தாய்க்கு ஏற்கனவே 2 ஆண்குழந்தைகள் உள்ளனர். புதைக்கப்பட்டது பெண் சிசு.
பெண்ணின் கணவன், 2 பிள்ளைகள், பள்ளிவாசல் இமாம் ஆகியோரும் சடலம் தோண்டியெடுக்கப்படும் இடத்தில் சமூகமளித்திருந்தனர்.