புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் இராஜினாமா செய்ததில் இருந்து வெற்றிடங்கள் உள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஜனாதிபதி நான்கு அமைச்சர்களை நியமித்திருந்தார்.
நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து , அமைச்சரவை அமைச்சர்கள் பலர் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்தி
புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், புதிய அமைச்சரவை அடுத்தவாரம் நியமிக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்