உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சா்வதேச அளவில் கடந்த வாரம் கூடுதலாக 1.8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. முந்தைய வாரத்தில் பதிவு செய்யப்பட்ட பாதிப்பு எண்ணிக்கையைவிட இது 20 சதவீதம் அதிகமாகும். ஆப்பிரிக்காவைத் தவிர மற்ற அனைத்து பிராந்தியங்களிலும் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதே நேரம், உலக அளவில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைப் போலவே கடந்த வாரமும் சுமாா் 45 ஆயிரமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.