கறிவேப்பிலையின் விலையைக் கேட்டு தமிழர் ஒருவருக்கு மாரடைப்பு வந்த சம்பவம் ஒன்று வெளிநாடொன்றில் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து விரிவாக தெரியவருவதாவது,
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற தமிழர் ஒருவர் பல்பொருள் அங்காடியில் கறிவேப்பிலை வாங்குவதற்காக சென்று பத்து இலைகளைக்கொண்ட ஒருபிடி கறிவேப்பிலையை எடுத்து காசாளரிடம் நீட்டியுள்ளார்.
அதனை வாங்கிய காசாளர் தராசில் நிறுத்தபோது 50 கிராமுக்கும் குறைவான எடையில் இருந்துள்ளது. விலை எவ்வளவு என்று விசாரித்தபோது 80 பிராங் என்று காசாளரால் கூறப்பட்டுள்ளது.
இதைக்கேட்ட குறித்த தமிழருக்கு பக்கென்று இருந்ததுடன் காசாளர் ஏதோ நக்கலுக்கு சொல்கிறார் என்று நினைத்து ”பகிடி விடாமல் விலையைச் சொல்லுங்கோ” என்று மீண்டும் கேட்டுள்ளார்.
ஆனால் மீண்டும் அவர் 80 பிராங் என்றார். இதனைக் கேட்ட குறித்த தமிழர் உணர்ச்சிவசப்படு காசாளருடன் வாக்குவாதப்பட்டார். அத்துடன் அவருக்கு சிறிது நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையுஇல் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதென கண்டறிந்தனர். எவ்வாறாயினும் உரிய நேரத்துக்குள் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதால் உயிர் பிழைத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.
குறித்த நபரை வைத்தியசாலையில் சேர்ப்பித்த அந்த கடையின் காசாளர் கறிவேப்பிலைகுரிய பணத்தை எடுக்காமல் இலவசமாகவே அவரிடம் கொடுத்ததாக கூறியுள்ளார்.