புதிய மரபணுத் திரிபு வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டதையடுத்து, திங்கட்கிழமை முதல் மிக அவசரமாக புதிய கொரோனாத் தடுப்பூசி மையம் ஒன்றை போர்தோவில் திறக்க உள்ளனர்.
போர்தோவின் Bacalan பகுதியில் திறக்கப்பட உள்ள இந்தக் கொரோனாத் தடுப்பூசி மையம், முக்கியமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரிற்கும் தடுப்பு ஊசிகள் போடுவதற்காகத் திறக்கப்படுகின்றது என Nouvelle-Aquitain பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS) தெரிவித்துள்ளது.
புதிய மரபணுத் திரிபு வைரஸ் ஒன்றுடன் போராடுவதற்காக உடனடியாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.