பிரபல நடிகை ஸ்வாதிலேகா செங்குப்தா தனது 71வது வயதில் காலமானார்.
பிரபல பெங்காலி நடிகையான ஸ்வாதிலேகா பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்துள்ளவர்.
இந்த நிலையில் சில காலமாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஸ்வாதிலேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இது குறித்து அவரின் மகளும் நடிகையுமான சோயினி கூறுகையில், என் தாயாரின் திரை ஆளுமை பல ஆண்டுகளுக்கு மக்கள் நினைவில் நிற்கும்.
சிறந்த மனிதராகவும், நடிகையாகவும் அவர் திகழ்ந்தார். ஸ்வாதிலேகா பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தவர் என கூறியுள்ளார்.