தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் `குக்கு வித் கோமாளி’ இந்த நிகழ்ச்சிக்கு என்ற தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
குக்கு வித் கோமாளி நான்கு சீசன் முடிவடைந்து தற்போது ஐந்தாவது சீசன் வரவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் பலமே கோமாளிகளும், நடுவர்களும்தான். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களில் நடுவர்களாக சமையல் வல்லுநர்கள் செஃப் தாமுவும், செஃப் வெங்கடேஷ் பட்டும் இருந்தார்கள்.
கண்டிப்பான நடுவர்களாக நாம் பார்த்துப் பழகியவர்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடனும், கோமாளிகளுடனும் சரிசமமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்து அவர்களுடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டினார்கள்.
அந்த நிகழ்ச்சி அவர்களை அவர்களாக இருக்க வைத்தது என்றே சொல்லலாம். தற்போது அந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டு நடுவர்களும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மேலும் செஃப் வெங்கடேஷ் பட் இதுதொடர்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றையும் ஈட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில், சன் டிவியில் புதிதாக வரவிருக்கிற நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் இருவரும் நடுவர்களாக வர இருக்கிறார்கள் என ஒருபுறம் சமூகவலைதள பக்கங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
எந்த நிகழ்ச்சியின் வழியாக இருவரும் நம்மை என்டர்டெயின் செய்யப் போகிறார்கள் என்பதை இருவரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.