சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட பணியாளர்மட்ட ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெளியிடப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி ஊழியர் மட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அடுத்த சில வாரங்களுக்குள் தனது ஒப்புதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்போது பணியாளர்கள் நிலை ஒப்பந்தம் IMF நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும், ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.