தயவுசெய்து என் பெயரை அந்தப் பட்டியிலில் இருந்து நீக்கிவிடுங்கள் என பிக்பாஸ் சீசன் 5 குறித்து நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குறித்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது 5வது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முன்னோட்டத்தை விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்டது.
இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் பரவின. அந்த வகையில் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து, துள்ளுவதோ இளமை படப் புகழ் அபினய், நடிகை ஷகீலாவின் மகள் மிலா, நடிகை ஐஸ்வர்யா, நடிகை வடிவுக்கரசி, சூசன், மகேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ´´என்னுடைய பெயரை பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் பார்த்தேன். நான் 5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தயவுசெய்து என் பெயரை அந்தப் பட்டியலில் இருந்து நீக்குங்கள்´´ என்று குறிப்பிட்டுள்ளார்.