இலங்கையிலுள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பிரதான வர்த்தகர்கள், மற்றும் தொழிலதிபர்களை உள்ளடக்கிய வர்த்தக சபை விரைவில் உருவாக்கப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வர்த்தக சமூகம் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும், உள்ளுர் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கும், இது நாட்டின் வர்த்தக துறையின் அபிவிருத்திக்கு பெரிதும் உதவும் எனவும் நம்பப்படுகிறது.