2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் வர்தமானி அறிவித்தல் வௌியீடு.
இதேவேளை, ஒதுக்கீட்டுச் சட்டமூல (2022) மூன்றாம் மதிப்பீடு சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இத்துடன் குழுநிலை விவாதம் முடிவுக்கு வந்தது.
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2021 நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2022 வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 10 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.