பாடசாலை நேரத்திற்கு அப்பால் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுப்படுவதற்கு போக்குவரத்து வசதி
பாடசாலை நேரத்திற்கு அப்பால் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுப்படுவதற்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு வீர வீராங்கனைகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பருவகால பயண சீட்டுகளை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பாதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்இ பாடசாலை விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை மாத்திரமின்றி ஏனைய அனைத்து விளையாட்டுக்களிலும் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.