பாடசாலை நடவடிக்கைகள் இன்று வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும், ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளுக்கு வருவார்கள் என நம்புவதாக அமைச்சர் கூறினார்.
தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பது ஆசிரியர்களின் உரிமையென்றாலும் பாடசாலை மாணவர்களை கருத்திற்கொண்டு இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பல ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.