கண்டி, தாலாத்துஓய தமிழ் மகா வித்தியாலயத்தில்.. சுகவீனம் காரணமாக பாடசாலைக்கு ஒரு நாள் சமூகமளிக்காத 12ம் வகுப்பு மாணவி(வினோதினி)யை பாடசாலையின் அதிபர்(இந்திரகுமார்) தூசன வார்த்தைகளால் திட்டி எஷ்லோன்பட்டையால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.
“மாதா,பிதா,குரு,தெய்வம்”
தெய்வத்துக்கே முன் இருப்பது “குரு” ஸ்தானம் தான். அதை தூசன வார்த்தைகளால் அழகு படுத்தி ஒரு மாணவியை அடித்துள்ளார் இவர்.
“அடியாத பிள்ளை படியாது” என்பார்கள். அந்த அடி.., பிள்ளை படிப்பதற்காக இருக்க வேண்டுமே தவிற ஒரு பிள்ளை சாகும் அளவிற்கு கொடூரமாக இருக்கக்கூடாது.