பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நவம்பர் 2 புதன்கிழமை கொழும்பில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன.
பங்குபற்றுபவர்கள்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), முன்னிலை சோசலிசக் கட்சி (FSP), இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU), பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு (IUSF), மற்றும் இலங்கையின் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் (YJASL) என்பன இதில் பங்கேற்கவுள்ளன .
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டறிக்கையில் குழுக்களின் பிரதிநிதிகள் நேற்று (25) கொழும்பில் கையெழுத்திட்டனர்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்தையும் வெளியேற்றுவதற்கான முதல் படியாக” அடுத்த வாரம் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு 10 இல் உள்ள எல்பின்ஸ்டோன் திரையரங்கில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பாரிய ஆர்ப்பாட்டம் எதிர்ப்பு பேரணியாக நடத்தப்படவுள்ளது.