பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் நடன ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நேரடித் தொடர்புடைய 12 பேருக்கு தொற்று உள்ளதாக இன்றைய பி சி ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மிருசுவிலில் வங்கி உத்தியோகத்தருடன் தொடர்புடைய குடும்பத்துக்கு தொற்று உள்ளமை கடந்த வாரம் கண்டறிப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புடைய பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் துரித நடவடிக்கையால் இந்த 13 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.