பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி, மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
இந்த சோகமான சம்பவம், புத்தளம்- வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம்-9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர், திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே அம்மாணவி மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.