யூத முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கேட்டு பரிசில் இன்று 20.000 பேர் குவிந்தனர்.
பரிசின் Place du Trocadéro பகுதியில் பொதுமக்கள் பலர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் 70 வயதுடைய யூத மதத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ஏப்ரல் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவரது சாவுக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மொத்தமாக 20.000 பேர் இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். இரண்டு வருடங்கள் ஆகியும் முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
பகிருங்கள்.. உங்கள் கருத்துக்களை பதியுங்கள், மேலும் இது போன்ற பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்…