தாம்பத்தியம்… திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம்தான் என்றாலும் அது இருமனமொத்து நடக்க வேண்டிய ஒன்று. அதேவேளையில் இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது.
உடலுறவு நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தி உறவு கொண்டால் உடலில் சூடு அதிகரித்து ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல், விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதால் முழுமையாக இன்பம் அனுபவிக்க முடியாது. இவற்றை அடிப்படையாகக்கொண்டே குளிர்ச்சியான சூழல் உள்ள இரவில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக இரவு அல்லது அதிகாலை 4 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் உறவு வைத்துக் கொள்வது ஏதுவான சூழலாகும். வயிற்றில் உணவு இருக்கும் நேரத்தில் உறவு வைத்துக்கொண்டால் உணவு செரிமானமாகாமல் போவதுடன் வேறு சில பிரச்சினைகள் எழும். குறிப்பாக, சாப்பிட்டதும் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் மூலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இரவில் படுக்கைக்குச் சென்றதும் சில மணி நேரம் கழித்து உறவு கொள்வதே சரி.
இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. குறிப்பாக, பல ஆண்கள் பகல் வேளையில் கண்டுகொள்ளாத தம் மனைவியரை இரவில் படுக்கைக்கு மட்டும் அழைப்பதால் பலர் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு உறவுக்கு மறுப்பார்கள். ஆகவே, மனைவியாக இருந்தாலும் அவரது ஆசாபாசங்களுக்கு மதிப்பளித்து நடந்தால்தான் உறவுக்கு சம்மதிப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உடலுறவு என்பது மனிதன் உள்பட அனைத்து உயிரினங்கள் மத்தியில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம். இதில் மனித இனத்தில் மட்டுமே பெண்களைவிட ஆண்களே முதலில் தயாராகின்றனர். நேரம், காலம் பார்க்காமல் உறவு கொள்வதில் ஆண்களே ஆர்வம் காட்டுகின்றனர். பகலில் உறவு கொள்வதைவிட இரவில் உறவுகொள்வதே நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உடலுறுப்பு பகுதிக்கு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைக்க வேண்டியது அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கும். இரவில் எத்தனைமுறை உறவு கொண்டாலும் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும். இதன்மூலம் உடலுறுப்புக்குத் தேவையான அளவு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைத்துவிடும் என்பதால் இரவில் தாம்பத்தியம் வைத்துகொள்வதே உடல்நலத்துக்கும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
சிலர் இரவு முழுவதும் உறவு வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை உறவு கொண்டபிறகு ஆழ்ந்து உறங்கினால் ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் நடக்கும். இதனால் மீண்டும் மீண்டும் வைத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. அதுவே பகல் நேரமாக இருந்தால் உடல் சோர்வடைவதுடன் வேறு சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் பகலில் உடலுறவு பரிந்துரைக்கப்படுவதில்லை