பிரித்தானியாவில் நொறுக்குத் தீனி தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தை அடுத்து, மனைவியை கொன்று உடலை வெட்டி கொறுக்கியுள்ளார் பிரித்தானியர் ஒருவர் கிரேட்டர் மான்செஸ்டர், பிரின்னிங்டன் பகுதியை சேர்ந்த 49 வயதான தாமஸ் மெக்கான் கொலையை ஒப்புக்கொண்டதுடன்,
இன்று மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது தந்தையின் கொடுஞ்செயல் தங்களை மொத்தமாக பாதித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மெக்கானின் பிள்ளைகள்,
நாங்கள் எங்கள் தாயார் மீது அதிக பாசம் வைத்திருந்தோம் எனவும், தந்தையின் மீது அதே அளவுக்கு பாசம் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர் 2020 மே மாதம் 20ம் திகதி மெக்கான் தமது 46 வயதான மனைவி யுவோன் என்பவரை குளியலறையில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்
பின்னர் குளியல் தொட்டியிலேயே வைத்து அவரது உடலை துண்டாக வெட்டி, பல பகுதிகளில் மறைவு செய்துள்ளார் பொலிசாருக்கு யுவோனின் மொத்த உடல் பாகங்களும் இதுவரை கண்டெடுக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது
சம்பவத்தன்று நொறுக்குத் தீனி தொடர்பில் உருவான் வாக்குவாதம் இறுதியில் கொலையில் முடிந்துள்ளது யுவோன் கடைசியாக தமது அண்டை வீட்டாருக்கு அனுப்பிய குறுந்தகவலில், நாங்கள் இருவரும் மீண்டும் வாக்குவாதம் செய்கிறோன் என குறிப்பிட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்