நைஜீரிய இராணுவத் தளபதி லுதினண்ட் ஜெனரல் இப்றாஹிம் அத்தாஹிரு உட்பட 11 அதிகாரிகள் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், கடுனா சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலையில் விமானத்தை தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி கவலை தெரிவித்துள்ளார்.
54 வயதுடைய இப்றாஹிம் அத்தாஹிரு ஜனவரி மாதம் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்றிருந்தார்.