20 வயது யுவதி உள்ளிட்ட மேலும் எட்டுப் பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 422 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள 08 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 430 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றும் (18), மூவர் நேற்று முன்தினமும் (17), கடந்த செவ்வாய்க் கிழமை (16) இருவரும், கடந்த ஜனவரி 20, 22 ஆகிய தினங்களில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெகட்டன பிரதேசத்தைச் சேர்ந்த, 52 வயதான ஆண் ஒருவர், தொம்பே மாவட்ட வைத்தியசாலையில் இருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (18) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, உக்கிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 58 வயதான ஆண் ஒருவர், அநுராதபுரம் மெத்சிறி செவண சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் 17 நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோய், உக்கிர சிறுநீரக சிதைவடைவு மற்றும் உயர் இரத்த அழுத்தம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிதீமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 20 வயதான பெண் ஒருவர், கஹகொல்ல சிகிச்சை நிலையத்திலிருந்து மஹியங்கணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணமும் நேற்று முன்தினம் (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நியூமோனியாவுடன் சுவாசத் தொகுதி செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 86 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணமும் நேற்று முன்தினம் (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த செவ்வாய்க் கிழமை (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணமும் கடந்த செவ்வாய்க் கிழமை (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், மூச்சுக் குழாய் அழற்சி (Bronchitis) நிலை காரணமாக சுவாசத் தொகுதியின் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 20ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதயம் மற்றும் சுவாசத் தொகுதி செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 22ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.