தற்காலத்தில் மோசமான உணவுப்பழக்கத்ததால் நெஞ்சு எரிச்சல் என்பது பெரும்பாலானவர்களுடைய தொந்தரவாக மாறிவிட்டது.
ஒருவருக்கு அசிடிட்டி பிரச்சனை இருந்தால், இந்த பிரச்சனையால் அடிக்கடி நெஞ்சில் எரியும் உணர்வு ஏற்படும்.இந்த உணர்வு ஏற்படும் போது எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
ஆனால் இந்த பிரச்சனை அடிக்கடி வருகிறது எனில் அதை புறக்கணிக்காதீர்கள். இந்த பிரச்சினை மிகவும் தீவிரமாகவும் இருக்கலாம்.
ஆயுர்வேதத்தில் நெஞ்செரிச்சல் குணமாக பல மருந்துகள் உள்ளன. அந்த வகையில் பக்கவிளைவுகள் இல்லாமல் வீடட்டு வைத்தியம் மூலமாக இதனை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கைப்பிடி அளவு குப்பைக்கீரை
ஓமம் 10 கிராம்
மஞ்சள் தூள் சிறிதளவு
செய்முறை
குப்பை கீரையை நன்றாக சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
500 மி.லீ தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்தது அதில் குப்பைக்கீரை ஓமம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தண்ணீர் 100 மி.லீ ஆகும் வரை கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதைனை ஆறவைத்து வடிகட்டி குடித்துவர நெஞ்சு எரிச்சல் விரைவில் குணமாகும்.
இந்த பானத்தை அடிக்கடி பருகினால் எரிச்சல் பிரச்சினைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.